Sunday, August 15, 2010

அருட்காப்பு

அருட்பேராற்றல்
இரவும் பகலும்
எல்லா நேரங்களிலும்
எல்லா இடங்களிலும்
எல்லா தொழில்களிலும்
உறு துணையாகவும்
பாதுகாப்பாகவும்
வழி நடத்துவதாக அமையுமாக.19 comments:

athira said...

சூப்பர் ஹைஷ் அண்ணன்..... நான் பிளேனைச் சொன்னேன்:). அதுசரி, எதுக்கு புலிப்படம்?:).

நீங்க புதுசு புதுசா புளொக் தொடங்குவதைப் பார்க்க சரியான சந்தோசமாக இருக்கு.... தொடர்ந்து நிலைக்க, கடவுளை மனதார வேண்டி வாழ்த்துகிறேன்.

சுதந்திரதினத்தைக் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும், சுதந்திரதின வாழ்த்துக்கள்.

ஜெய் ஹிந்..(கவிசிவா சொல்லித்தந்தவ).

(please remove the word verification)

athira said...

தினமும் வரப்போகும் தின சிந்தனையை நினைக்க இப்பவே சந்தோசமாக இருக்கூஊஊஊ.

“மாற்றம் ஒன்றுதான் மாறாதது”..... ஐ... முதலாவது சிந்தனை... என்னுடையது:).

இலா said...

ஹை.. புது பூ! இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

அதீஸ்.. அதுகுள்ளேயேவா....

ஹைஷ்126 said...

அன்பு தங்கை அதிரா நல்வரவுக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.

பேபி பூஸ் பெரிசானா புலிதானே???:)

ஜெய்ஹிந்த்

ஹைஷ்126 said...

அன்பு இலா நலவரவு. ஜெய்ஹிந்த்:)

athira said...

ஆ..... பூஸ்குட்டி வளர்ந்தால் புலியாகுமோ?:), அதுதானோ எல்லோரும் பூஸ் என்றதும் பயப்புடீனம்:)), இப்பூடி உங்களைப்போல பெரியவர்கள், உண்மையை ஒளிக்காமல் சொன்னால்தானே தெரியும்....

ஆ..... நல்லநாள் அதுவுமா எனக்கொரு சந்தேகம்... அப்போ புலிக்கு குட்டி இல்லையோ?:))

athira said...

இலா said... 3
ஹை.. புது பூ! இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

அதீஸ்.. அதுகுள்ளேயேவா....
/// இலா இப்ப அதுக்குள்ள இல்ல:))), குல்ட்க்குள்ள இருந்து வெளியில வந்திட்டேன்.... வெக்கையாக இருக்கு:))).

இந்தாங்க இலா பாதிப் பக்கோறா.. ஒப்பந்தத்தை நான் மீறமாட்டேன்:)))).

இலா said...

அதிரா! பக்கோடா எல்லாம் கொடுத்து வெயிட் ஏத்தாதீங்க... இப்ப தான் எழுந்தேன்..

athira said...

இலா... கர்ர்ர்ர்ர், அது பக்கோடா இல்ல, சிக்கின் பக்கோறா:)), கட்டிலுக்குகீழ இருந்து தனியா நான் மட்டும் சாப்பிட்டா, பிறகு எனக்கு கண்படாது?? அதுதான் பாதி உங்களுக்கு..... :)) உஸ்ஸ் சத்தம் போடாதீங்க இலா, ஆரும் பங்குக்கு வந்திடப்போகினம்:)), இது நெடுகவும் கிடைக்காது, இப்போ வடிவாச் சாப்பிடுவம், நாளைக்கு வடிவா கதைச்சுக்கதைச்சு வோக் போவம் ஓக்கை...

6 மணிக்கு எழும்பி தினசிந்தனையைப் படிச்சுப்போட்டு, திரும்பவும் படுத்து 8 மணிக்கு எழும்புங்கோ இலா, என்னைப்போல:))

இளமதி said...

அன்புச் சகோதரர் ஹைஷ்!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

’தின சிந்தனை’ என்னும் இந்த புதிய இணையத்தளம் நல்ல ஒரு முயற்சி. உங்கள் எண்ணங்கள், செயல்கள் யாவும் நிறைந்த பொருள் உள்ளனவாக இருக்கின்றன.

தின சிந்தனையில் வரும் சிந்தனைகள் அனைத்தும் எம்மை சிந்திக்கவும் செயற்படவும் வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அனைவருக்கும் பயன்தரக்கூடிய பல விஷயங்களை தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு இறை ஆற்றலின் திருவருளும், குருமார்களின் குருவருளும் பரிபூரணமாக கிடைத்திட நானும் வேண்டுகிறேன்.

உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
மிக்க நன்றி!

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி இளமதி நீண்ட விடுப்புக்கு பின் நல்வரவு தந்து வாழ்த்தி பாராட்டியதற்கு மிகவும் நன்றி. வேலை பளு அதிகம் இருப்பதால், நேரம் கிடைக்கும் போது முடிந்தவரை 2 அல்லது 3 வரிகளில் தானியங்கி பதிவுகள் போட்டு வைத்து இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது மட்டுமே பின்னுட்டங்களுக்கு பதில் போடமுடியும் எனபதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க வளமுடன் - வாழ்க வையகம்

kavisiva said...

நானும் வந்துட்டேன் :)

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி கவிதா(சிவா) நல்வரவு.

வாழ்க வளமுடன் - வாழ்க வையகம்.

athira said...

ஆ... இளமதி, நல்வரவு.... நல்வரவு...

இது ஹைஷ் அண்ணனின் இடமென்றாலும், உங்களைக் கண்டதும் வரவேற்காமலிருக்க முடியவில்லை. மிக்க சந்தோசமாக இருக்கு. முடியும்போது இங்குமட்டுமாவது வந்து கதைத்துப்போங்கோ....

கவி வந்திட்டீங்களோ? இலாவைப் பார்த்தீங்களோ?:)) கடவுளே கேட்டிடப்போகுது:)).

இமா said...

ஹைஷ்,
சொல்ல மறந்த கதை... நன்றி.
ஃபொலோ பண்ணுகிறேன். ;))

athira said...

இமா said... 15

ஃபொலோ பண்ணுகிறேன். ;))
/// ஆ.... எனக்குப் பயம்மாஆஆஆஆக்கிடக்கு:))), கையில ஆயுதம் ஏதும் இல்லையே?:))).

இமா said...

இது வேற அதீஸ். ஹைஷுக்கு விளங்கும். ;)

ஹைஷ்126 said...

அன்பு இமா

நல்வரவு... சொல்ல மறந்த கதையை இங்கு சொல்லி இருக்கேன்..

http://haish126vp.blogspot.com/2010/08/blog-post_21.html

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

ஆ...அன்பு தங்கை அதிராவின் பதிவு படித்தபின் தான் தெரிகிறது ஏதாவது கார்விங் கத்தியுடன் ஃபொலோ பண்ணவில்லைதானே:)

Post a Comment